Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

காமராசர் அறிவுலகம் கட்டுமான பணிகள் விறுவிறு

காமராசர் அறிவுலகம் கட்டுமான பணிகள் விறுவிறு
ரூ.235 கோடி மதிப்பில் 7 மாடிகளுடன் கூடிய காமராசர் அறிவுலகம் கட்டுமானம் பணி திருச்சியில் நடக்கிறது.

இறுதி கட்டத்தை எட்டியுள்ள பணிகள் 2027-மார்ச் இறுதிக்குள் முடிந்து பயன்பாட்டிற்குள் வரும் என பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

பகிரவும் WhatsApp Facebook

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப்போல திருச்சியில் ரூ.235 கோடியில் 4.57 ஏக்கரில், காமராசர் அறிவுலகம் கட்டும் பணி தீவிரமாக நடக்கிறது.


இந்த அறிவுலகம் தரைத்தளத்துடன் 7 மாடிகளுடன் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தமுள்ள 1.95 லட்சம் சதுர அடியில், 36,400 சதுர அடியில் தரைத்தளம் அமைகிறது. இதில், 850 இருக்கைகள் கொண்ட கலையரங்கம் அமைக்கப்படுகிறது.

நான்கு சக்கர வாகனங்கள் 80, இரண்டு சக்கர வாகனங்கள் 207 நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதி, பாடநூல் விற்பனைநிலையம், சிற்றுண்டி கூடம், போட்டித் தேர்வுகளுக்கான படிக்கும் பிரிவு புத்தக வசதி, சிறுவர் நூலகம், சொந்த புத்தகம் வாசிக்க தனி இடம் என்று பிரமாண்ட முறையில் இந்த அறிவுலகம் அமைக்கப்படுகிறது.

சோலார் மின் உற்பத்தி, 7 மாடிகளுக்கும் எளிதில் செல்லும் வகையில் மின்தூக்கிகளும், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி ஆகிய சிறப்பு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இறுதி கட்டத்தை எட்டியுள்ள பணிகள் 2027-மார்ச் இறுதிக்குள் முடிந்து பயன்பாட்டிற்குள் வரும் என பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, மாவட்ட நூலகர் கே.ராஜசேகரன் கூறுகையில், "சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம், கோவை பெரியார் அறிவுலகம் போன்று நவீன முறையில் ‘காமராசர் அறிவுலகம்’ இருக்கும். புதிய நூலகம் செயல்பாட்டுக்கு வந்தாலும், தற்போது செயல்பாட்டில் உள்ள மாவட்ட மைய நூலகம் தொடர்ந்து இயங்கும்" என்றார்.




முந்தைய செய்தி
சர்க்கரை விலையால் எகிறும் தீபாவளி இனிப்புகள் விலை
அடுத்த செய்தி
அதிகரிக்கும் விலைவாசி! சன்ன ரக அரிசி ரூ.30-க்கு விற்பனை

தொடர்புடைய செய்திகள்